கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் சேவையை 24 மணிநேரமும் முன்னெடுக்கும் நடைமுறை 30 ஆம் திகதியுடன் நிறைவு

Aarani Editor
1 Min Read
கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் சேவையை 24 மணிநேரமும் முன்னெடுக்கும் நடைமுறை, எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவைக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *