2026 ஆம் ஆண்டுக்குரிய பாதீட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தயாரிக்கும் போது மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாவட்ட அளவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
