2026 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 04 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன வெளியிட்டார்.
குறித்த வர்த்தமானியில், 2026 ஆம் ஆண்டுக்கான அனைத்து விடுமுறை நாட்களும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
