இந்தோனேசியாவில் கல் குவாரி இடிந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

Aarani Editor
0 Min Read

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டபோது, 24-க்கும் மேற்பட்டவர்கள் குவாரி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

எஞ்சியவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், 6 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை.

காணாமல் போனோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை, இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *