இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1,726 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றுள் 200 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதிய உண்மைகள் இல்லாமை, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் உள்ளடங்காமை உள்ளிட்ட காரணங்களால் 450 முறைப்பாடுகளை விசாரிக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் இலஞ்சம் தொடர்பாக 24 வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் 07 வழக்குகளும் சட்டவிரோத சொத்து ஈட்டல் தொடர்பில் 02 வழக்குகளும் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாகக் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
