கொழும்பில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதரை, அளுத்மாவத்தை வீதியிலுள்ள பாலத்துக்கு அருகிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
60 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், அவர் வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சடலமானது அடையாளம் காண்பதற்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/
