சமூக ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய அனைத்து துறைகளைப் போன்றே ஊடகத்துறையும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை பூதாகாரமாக்கி மக்களை அச்சமூட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தக் கூடிய சட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது உலகம் முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை ஊடக ஓடுக்குமுறையாக கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
