நைஜீரியாவில் இடம்பெற்றுள்ள பஸ் விபத்தில் சிக்கி 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர்.
நைஜீரியா – ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற தடகள வீரர்கள் பஸ் ஒன்றில் கானோ நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.
குறித்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கி 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர்.
பஸ்ஸின் சாரதியின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நைஜீரியாவில் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வாகனம் செலுத்துவதனால் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய கடந்த ஆண்டு மாத்திரம் நைஜீரியாவில் 9,570 வீதி விபத்துக்களினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





Link: https://namathulk.com
