முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தனர்.
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுப்பதற்காக இரு மாணவிகள் இன்றையதினம் (01) சென்றுள்ளனர்.
இதன்போது இருவரும் தவறி கேணிக்குள் விழ்ந்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com
