தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் நேற்றிரவு குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய சந்திப்பில் தேர்தலைப் பற்றி மாத்திரம் அல்லாது பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசிய பேரவைக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com
