கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மட்டக்குளி பகுதியில் அளுத்மாவத்தை வீதியும் புளூமென்டல் (Blumenthal) வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
பஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கு காரணமென கூறப்படுகின்றது.
விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே பேருந்தில் இருந்துள்ளனர்.
குறித்த பஸ் வண்டி கண்டி – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
