இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இன்றையதினம் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப்போட்டி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இதுவரை இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் கிண்ணத்தை வென்றது இல்லை.
இந்நிலையில் ஏதேனும் ஒரு அணி புதிதாக கிண்ணத்தை வெல்லும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் ரோயல் சேஞ்சஸ் பெங்களூர் அணி வெற்றி பெறும் பச்சத்தில் விராட் கோலி ஐபிஎல் தொடர்களிலிருந்து தனது ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 18ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியால் தலைவராக இருந்தும் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை.
ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார்.
இதனால், இந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக எப்படியாவது கிண்ணத்தை வென்று கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் விராட் கோலி இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் தான், அவரது ஐபிஎல் எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
