தென்கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (03) இடம்பெற்று வருகிறது.
இம்முறை வாக்களிப்பதற்கு சுமார் 44.4 மில்லியன் மக்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள மக்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டனர்.
எதிர்க்கட்சியின் லீ ஜே-மியுங் முன்னணியில் உள்ளதாகவும் யூனின் அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினரான ஆளும் கட்சியின் கிம் மூன்-சூ (Kim Moon-soo) , அவரை விட பின்தங்கியுள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவில் இராணுவ அவசர நிலையை செயற்படுத்தியதற்காக அப்போதைய ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் (Yoon Suk-yeol) கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தென்கொரிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த இரு மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.
அதற்கமைய இன்றையதினம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்று வருகிறது.
Link: https://namathulk.com
