அவுஸ்திரேலியாவின் துணைப்பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் 15 பேர் கொண்ட குழுவொன்று அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
