இரத்த பரிசோதனைகளுக்காக அதிகப் பணம் அறவிட்ட மருந்தகத்துக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

Aarani Editor
1 Min Read
FBCTest

டெங்கு மற்றும் ஏனைய நோய் தொடர்பான பரிசோதனைகளுக்காகத் தற்போது அறவிடப்படும் கட்டணத்தைவிட அதிகத் தொகையினை அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த பரிசோதனைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணம் கோரப்படுவதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இரத்த பரிசோதனைகளுக்காக 400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய் குறித்த பரிசோதனைகளுக்காக 1,200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மல்வானைப் பகுதியில் இயங்கும் மருந்தகம் ஒன்றில் இரத்த பரிசோதனைக்காக அதிகளவான கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்தகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *