நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பஸ் அலகொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய பேருந்து பஸ் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்கீழ், மேல்மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட மாகும்புர (கொட்டாவ), கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ போன்ற பிரதான வழிகளில் இடைவழிகள் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான சொகுசான, தாழ்வான மிதிபலகை கொண்ட 100 பஸ்களை சேவையில் அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
