திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்;.
திருகோணமலை – குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் மீனவர் ஒருவர் காயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் தீவிரவாதிகள் போல் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துமுள்ளார்.
Link: https://namathulk.com
