குளியாபிட்டிய தொழிநுட்ப கல்லூரியின் 1ஆம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் அந்தக் கல்லூரியின் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவி குளியாபிட்டியில் அமைந்துள்ள குளமொன்றில் குதித்த போது அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பகிடிவதையால் பாதிக்கப்பட்ட இந்த மாணவி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 23, 25 வயதுடைய குளியாப்பிட்டி தொழிநுட்ப கல்லூரியின் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று குளியாபிட்டிய மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
