தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கின் போது இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான 478,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மடிக்கணனி, கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
துசித ஹல்லொலுவ அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முதல் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
