மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
நைஜீரியா – போர்னோ மாகாணம் மைராரி பஸ் நிலையத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்றதும், பயணிகள் பலர் அதில் ஏற முயன்றனர்.
அப்போது அங்கு யாரும் எதிர்பாராத விதமாக குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயம் அடைந்த பயணிகள் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com
