உதய கம்மன்பிலவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

Aarani Editor
1 Min Read
Udaya Gammanpila

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா வர்த்தகரான பிரயன் ஷெடிக் என்பவருக்கு சொந்தமான 20 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவன பங்குகளில் மோசடி செய்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து உதய கம்மன்பில குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதன் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் உதய கம்மன்பில குற்றமற்றவர் என தீர்ப்பளித்திருந்தது.

எனினும் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இதுவரையில் நீக்கப்படவில்லை என கம்மன்பில சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம் பயணத் தடையை நீக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *