நடப்பு அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12ஆம் திகதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெறவுள்ளது.
தொடக்கப் போட்டியில் நடப்பு சம்பியனான வொஷிங்டன் ஃப்ரீடம், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்சுடன் மோதுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் ரஷித், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கான், பர்மா, கொங்கோ, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தடை விதித்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.
மேஜர் கிரிக்கெட் லீக்கை ‘மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்’ என வரையறுத்து அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி பெறுவதற்கு ஆலோசித்து வருவதாக மேஜர் லீக் கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com
