முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரி திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுப செய்தியை வெளியிடுகின்றேன்.
அதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்தார்.
அத்துடன், வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
