நாடளாவிய ரீதியில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 183 பேரும், கஞ்சாவுடன் 156 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 06 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 189 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 236 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ கஞ்சா போதைப்பொருளும், 110 கிராம் ஹேஷ் போதைப்பொருளும், 70,730 கஞ்சா செடிகளும், 105 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com
