இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் 2007 T20 உலகக் கிண்ணம் மற்றும் 2011 ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
பியூஷ் சாவ்லா ஐ.பி.எல் தொடரில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
2024 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதுடன் ஐ.பி.எல் போட்டியில் 150 மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர்களில் இவரும் ஒருவராவார்.
இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடைசி சர்வதேச போட்டி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
