இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

Aarani Editor
1 Min Read
இங்கிலாந்து

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைமையில் 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

அதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து மகளிர் அணி 3 க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 12.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி மீள ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 106 ஓட்டங்களைப் பெற்றது.

106 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *