அர்ச்சுனாவை எச்சரிக்கும் சரத் வீரசேகர

Aarani Editor
1 Min Read
சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்திக்குரியன என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

இது அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது.

அர்ச்சுனாவின் கருத்துக்களை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது.

300 கொள்கலன்களில் பிரபாகரின் ஆயுதங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழ் டயஸ்போராக்களிடமிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது.

அர்ச்சுனா குறிப்பிட்டுள்ள விடயங்கள் முன்னாள் போராளிகளுக்கும் உத்வேகமளிக்கும் வகையில் அமையும்.

அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்கள் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்புக்கு தடையாக அமையலாம் என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *