இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Aarani Editor
1 Min Read
EnglandCricket

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தநிலையில் 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *