மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடந்த காலத்தை விட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மயிலிட்டி துறைமுகத்தை விரிவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்.
இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று எங்களைக் காதலுடன் பார்க்கின்றார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com
