தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான முறைமை இல்லாமல், அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
குறித்த நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் கூறினார்.
Link: https://namathulk.com
