இலங்கையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்றையதினம் அதிரடியாகக் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டது.
இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.
இந்தநிலையில், ஜூன் மாதம் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்றையதினம் குறைந்துள்ளது.
நேற்றையதினம் 22 கரட் தங்கம், ஒரு கிராம் ரூ 9,130க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்யைதினம் 22 கரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து, ரூ.8980க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கரட் தங்கம் கிராமுக்கு ரூ.105 குறைந்து, ஒரு கிராம் ரூ.7385க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில் இவ்வாறு ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, நுகர்வோர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி, நகை வாங்கும் எண்ணத்தை ஊக்குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Link: https://namathulk.com
