களுத்துறை வடக்கு, பனாப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
அடையாளம் தெரியாத குழுவினர் குறித்த பகுதியிலுள்ள வீட்டிற்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையிலட் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அதே நேரத்தில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com
