முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்க்கின்றேன்.
சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
என்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருக்கின்றன, ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன், இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
Link: https://namathulk.com
