2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது 19.42மூ சதவீத அதிகரிப்பாகும்.
2025 ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாகும்.
குறித்த மாதத்தில், வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் காரணமாக இவ்வாறு வரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
Link: https://namathulk.com
