அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள 2023 – 2025 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டி, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் லீக் கட்டத்தில் மொத்தமாக 27 தொடர்களில் 9 அணிகளுக்கு இடையில் 69 போட்டிகள் இடம்பெற்றன.
அதில் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
இதேவேளை, உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடரான 2019 – 2021 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
அத்துடன், 2021 – 2023 தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
