இந்தியாவில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் இணையக்குற்றங்களின் முக்கிய செயற்பாட்டாளர்கள், இலங்கை மற்றும் கம்போடியாவில் மறைந்திருப்பதாக இந்திய புலனாய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தமிழக புலனாய்வுத்துறையின் கூடுதல் தகவல்களும் பெங்களூரின் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், சுமார் 4 கோடி ரூபாய் மோசடி குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் பெங்களூரைச் சேர்ந்த வயதான தம்பதியினரின் வங்கிக் கணக்கிலிருந்து பல இலட்சம் ரூபாய்கள் பெறப்பட்ட சம்பவமும் உள்ளடங்கியுள்ளது.
எனினும் இந்த பணம் இணையக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவை அல்ல என்றும் இலங்கையின் கெசினோவில் இருந்து திரும்பப் பெறப்பட்டது என்றும் கைது செய்யப்பட்டவர்கள் இந்திய விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com
