2026 உலகக் கிண்ண கால்பந்து – பிரேசில், ஈக்வடார், அவுஸ்திரேலிய அணிகள் தகுதி

Aarani Editor
1 Min Read
FIFAWorldCup2026

உலக கிண்ண கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெற உள்ளது.

இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

2022ஆம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா. ஜோர்தான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், அவுஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *