முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரியும் பெண், அடுத்த மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் இந்த பணிப்பெண் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் நேற்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், அதன்படி சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் இஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Link: https://namathulk.com
