அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ‘ஒப்பந்தத்தில்’ நிறைவடைந்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதன்படி, சீன மாணவர்களின் வீசாக்கள் இரத்து செய்யப்படும் என முன்னர் விடுக்கப்பட்ட அறிவிப்பு மீளப் பெறப்படும் எனவும், அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள சில தகவல்கள் மாத்திரமே வெளியாகியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பும் ஜெனீவாவில் ஒருமித்த கருத்துக்களைச் செயற்படுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டியதாக அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு ஜனாதிபதிகளும் அதனை அங்கீகரித்த பின்னர், புதிய திட்டங்களை அமுல்படுத்த முயற்சிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Link: https://namathulk.com
