தென்னாப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழந்தனர்.
பலத்த மழை காரணமாகஇ தென்னாப்பிரிக்காவில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளைஇ பாடசாலை பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
அந்நாட்டில் ஏப்ரல் 2022 இல் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட புயலில் சுமார் 400 பேர் பலியாகியிருந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
