அஹமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு கருப்புப் பெட்டிகளில், விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தின் முன் பகுதியில் உள்ள இரண்டாவது கருப்புப் பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
கருப்புப் பெட்டி என்பது ஒரு விமானம் பறக்கும்போது அதைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யும் ஒரு சிறிய இயந்திரமாகும்.
அதிவேக விபத்துகளைத் தாங்கும் வகையில் இவை வடிவமைக்கப்படும்.
விபத்திற்கான காரணங்களைக் கண்டறிய இந்த கருப்புப் பெட்டி உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
