உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன கொள்கை அடிப்படையில் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளன.
மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு ஊடாக இடம்பெற வேண்டும் என்பதை உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளன.
இரகசிய வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ஒன்றிணைந்து நேற்று ஊடக சந்திப்பினை நடத்தினர்.
இச்சந்தர்ப்பத்தில் போது அவர்கள் கூட்டாக இந்த தீர்மானத்தை அறிவித்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
எதிர்கட்சிகள் அனைத்தும் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதால் பொதுவான கொள்கைக்கு அமைவாகவே உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.
பொது கொள்கைக்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்தங்கள் ஊடாக இந்த கூட்டிணைவு ஏற்படுத்தப்படவில்லை.பொதுக்கொள்கை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது .
கொழும்பு மாநாகர சபைகளில் நிச்சயம் நாங்கள் ஆட்சியமைப்போம் என குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com
