Air India நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், தற்போது பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Link: https://namathulk.com
