யாழில், 220 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Aarani Editor
1 Min Read
220 kilograms of cannabis

யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோக்கிராம் கஞ்சா கைப்பறவறப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இராணுவ புலனாய்வு துறை மற்றும் விசேட அதிரடி படை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு கஞ்சா 220 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படகும் அதன் வெளி இணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மார்க்கமாக கொண்டுவந்த கஞ்சா 220 கிலோகிராமை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வுத்துறையும், விசேட அதிரடி படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் 220 கிலோகிராம் கஞ்சாவும், படகும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் கஞ்சாவையும், படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பனவற்றை பருத்தித்துறை பொலீசாரிடம் ஒப்படைக்க விசேட அதிரடி படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *