நேற்றையதினம் இரவு முதல் இஸ்ரேல் ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிந்து வருகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை தெஹ்ரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவை ஆகிய நகரங்களை இலக்கு வைத்து 100 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக, ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பின்வாங்கவில்லை எனின் ‘இன்னும் கடுமையான’ பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், இஸ்ரேலின் மேற்கு கலிலியில் 20 வயதுடைய பெண்ணொருவர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த 7 பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இஸ்ரேலின் அவசர சேவை தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com
