லண்டனிலிருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரித்தானியப் பயணிகள் விமானம், இயந்திர கோளாறு காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனால் லண்டனிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து லண்டனுக்கும் புறப்படவிருந்த இரண்டு பிரித்தானியப் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 700க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com
