இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை, சர்வதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசி சந்தர்ப்பமாக மாற்ற விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தின் பங்கேற்புடன் இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
2028 ஆம் ஆண்டுக்குள் கடன்களை அடைப்பதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியுமென இலங்கை நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
Link: https://namathulk.com
