அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்பாடுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
‘AI For Transforming Public Service’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பட்டறையில், ஜனாதிபதி செயலகத்தின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன், அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமான, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப முன்னெடுப்பாக அதிகாரிகளுக்கு தெளிவூட்டல் மற்றும் அவர்களை தயார்படுத்துதல், பொது சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த முன்னேற்றகரமான அணுகுமுறையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
Link: https://namathulk.com
