யாழ்ப்பாணம் மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக, பொதுமக்கள் நேற்றிரவு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
குறிப்பாக, யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியதால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை என, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிக்கின்றார்
Link: https://namathulk.com
