ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
எனினும் ஈரான் தவறு செய்துவிட்டது.
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான், அணுவாயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் போக்கு மனித உயிர்களை வீணாக்கும் செயல் எனவும் ட்ரம்ப் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
டிரம்ப்பின், இந்த எச்சரிக்கைக்கு பின்னர், தெஹ்ரானில், பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Link: https://namathulk.com
